internet

img

வாட்ஸ்அப் செய்திகள் தாமாக அழிந்து விடும் புதிய அம்சம் அறிமுகம்

வாட்ஸ்அப் செயலியில் குறுஞ்செய்திகள் தாமாக அழிந்துவிடும் புதிய வசதி சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் செயலியின் 2.19.275 பீட்டா பதிப்பில் குறுஞ்செய்திகள்  குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு குறுஞ்செய்திகள் தாமாக அழிந்துவிடும் வகையில் பயனர்கள் அமைத்துக்கொள்ளலாம்.
 வாட்ஸ்அப் செயலியின் குரூப் சேட் வசதியில் தற்போது இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5 நொடிகள் முதல் 1 மணிநேரம் வரையிலான காலத்திற்குள் குறுஞ்செய்திகள் தாமாக அழிந்துவிடும் படி பயனர்கள் அமைத்துக்கொள்ளலாம். 
ஏற்கனவே இந்த அம்சம் டெலிகிராம் செயலியில் உள்ளது. ’சீக்ரெட் சேட்’ எனும் வசதி கொண்டு டெலிகிராம் செயலியில் குறுஞ்செய்தி அனுப்பினால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தாமாக மறைந்துவிடும். டெலிகிராம் செயலியின் சீக்ரெட் சேட் வசதி மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் சர்வரில் சேமிக்கப்படாது. மேலும் ஃபார்வர்ட் செய்யவோ ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவோ முடியாது என்றும் அந்நிறுவனம் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.